மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியினந் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னையில் வரும் 17ம் தெதி நடக்கிறது.திராவிட முன்னேற்ற கழகத்தின் 50 ஆண்டுகாலம் தலைவராகவும், தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர்.மு.கருணாநிதி’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்பிலான நினைவு நாணயம் வெளியிட தமிழ்நாடு அரசு தரப்பில் ஒன்றிய நிதியமைச்சகத்திடம் கோாிக்கை வைக்கப்பட்டது. இதற்கு நிதித்துறை ஒப்புதல் வழங்கியது.
அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வரும் 7ம் தேதி கருணாநிதியின் நூற்றாண்டு நாணயம் வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.