திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம், பகுதியை சேர்ந்தவர் கமலூதீன். இவர் முதலியார் சத்திரம் அருகே கமால் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் தின்னர் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் அவரது கடையிலிருந்து புகை வருவதை பார்த்த அந்த பகுதியினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு துறை அதிகாரி ஜெகதீசன் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வழங்கும் வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் மற்றும், ரசாயனத்தை கொண்டு 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தின்னர் தயாரிப்பதற்காக மூன்று பேரல்களில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் தீ பற்றி வெடித்ததை அடுத்து தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர் அசம்பாவிதம் ஏற்படாதவாறு கட்டிடத்தில் பல்வேறு பகுதிகளும் தண்ணீர் அடித்து தீணை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரூ.5o ஆயிரத்திற்கு மேல் ரசாயன பொருட்கள் எரிந்து போனதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
தகவல் அறிந்த திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நேரில் சென்று தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.