புதுகையில் கருணாநிதி உருவப்படத்திற்கு
அமைச்சர் ரகுபதி மரியாதை
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகை யில் உள்ள கருணாநிதி திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிமாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் வீரமணி , பொருளாளர் எம்.லியாகத்தலி, மாநகர செயலாளர் ஆ.செந்தில்,திமுக விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் த.சந்திரசேகரன், மற்றும் சண்முகம் ,கே.எஸ்.சந்திரன், பெ.ராஜேஸ்வரி,மதியழகன்,எம்.எம்.பாலு, சுப.சரவணன், முத்துராஜ்,ரெங்கராஜ்,அ.ரெத்தினம்,அஷ்ரப் அலி, ராம.செல்வராஜ், ,சேக்கப்பன்,ஆஷிப்,ராஜமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி்னர்.
முன்னதாக புதுக்கோட்டை அண்ணா சிலையில் இருந்து அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
