அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டம் மின்சார வாரிய கேங்மேன் செந்தில்குமார் என்பவர், உட்கோட்டை கிராமத்தில் மின்கம்பத்தில் ஏறி மின் பழுது நீக்கிய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் எவரும் வராததாலும் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், செந்தில்குமாரின் மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு முன்பாக இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய இணைப்பு (சிஐடியு) சார்பில் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கேங்மேன்கள் சி ஐ டி யு சங்கத்தினருடன் இணைந்து, சிஐடியு திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமையில் சிஐடியு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் முன்னிலையில், கேங்மேன்கள் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடடக 25 லட்சமும், குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலையும் , பணப்பயன் உள்ளிட்டவைகளை மூன்று மாத காலத்திற்குள் வழங்கிட வேண்டும், கேங்மேனுக்கு என்ன பணி பணிக்கப்படுகிறதோ அந்தப் பணியினை மட்டுமே அவர்களுக்கு பணிக்க வேண்டும், கேங்மேன்கள் மேற்பார்வையாளர்கள் இல்லாமல் தனியாக பணிக்கு அனுப்பக் கூடாது, விபத்துக்கு காரணம் விதிமுறைகளை கடைபிடிக்காத அதிகாரிகளே எனவே அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்