வங்கதேசத்தில் பெரும் கலவரம் மூண்டு அந்நாட்டு அதிபர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். இந்நிலையில் அங்கு இந்தியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் இருநாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மேற்கு வங்க எல்லையில் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுவதற்காக, துணை ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் வங்கதேச எல்லைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்கள் ராணுவ ரோந்து வாகனங்கள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் டேங்கர்கள், வீரர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுடன் அங்கு செல்கிறார்கள், அதிகாரிகள் வாகனம் உட்பட சுமார் 50 வாகனங்கள் கரூர் , குளித்தலை, திருச்சி வழியாக தஞ்சை சென்றன. இவை தஞ்சாவூரில் உள்ள ராணுவ தளத்திலிருந்து சரக்கு விமானங்கள் மூலம் கொல்கத்தா சென்று அங்கிருந்து இந்திய- வங்கதேச எல்லை முழுவதும் பாதுகாப்பு பணிக்கு பயன்படுத்தப்பட உள்ளது.