புதுக்கோட்டை மச்சுவாடியைச்சேர்ந்த அய்யப்பன் -கோமதி தம்பதியரின் மகள் பார்கவி. இவர் புதுக்கோட்டையில் தனியார் பள்ளியில்7ம்வகுப்பு படித்து வருகிறார். இவர் கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு உதவுவதற்காக கலெக்டர் மு. அருணாவிடம் ரூ.10 ஆயிரம் ரொக்கம் நன்கொடை வழங்கினார். மாணவியின் இந்த உதவிக்காக அவரை கலெக்டர் பாராட்டினார். அப்போது மாணவியின் தாயார் கோமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உடனிருந்தனர்.
இந்த உதவி குறித்து மாணவி பார்கவி கூறும்போது, வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு தினமும் பெற்றோர் கொடுக்கும் பாக்கெட் மணியை சேர்த்து வைத்து இருந்தேன். அத்துடன் பெற்றோரிடமும் சிறிது பணம் வாங்கி பத்தாயிரம் ரூபாயை நன்கொடையாக கலெக்டரிடம் கொடுத்தேன். இதுபோல மற்ற மாணவர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.