பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் சிவன் கோவில் அருகே உள்ள ரெட்டியார் மண்டபத்தில் ஜனவரி 24 ஆம் தேதியான இன்று காலை சுமார் 10 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை வருமுன் காப்போம் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையுடன் இணைந்து
குரும்பலூர் பேரூராட்சி சார்பில் இலவச கண் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மெர்ஸி , துணைத் தலைவர் கீதா துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடக்க நிகழ்வின் போது குரும்பலூர் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களான பிரபு, கவிதா, வளர்மதி,எழிலரசி,ரம்யா, ஆகியோர் உடனிருந்தனர்.முகாமில் பங்கேற்ற திருச்சி ஜோசப் கண் மருத்துமனையின் மருத்துவர் ரிஹானா , மருத்துவமனையின் HR திலீப், தலைமையிலான குழுவினர் முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தனர். முகாமினை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் உட்பட. குரும்பலூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.