புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடைக்குடி என்ற கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக அரசு ரூ.6.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணி தொடக்க விழா இன்று காலை நடந்தது. கலெக்டர் அருணா தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டி, அங்கு நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல், புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, அரிமளம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மேகலா முத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.