கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன், தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் ஆர்த்தி ஆகியோருடன், தனது காரில் ஜெயங்கொண்டத்திலிருந்து கரூர் நோக்கி திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெருஞ்சிக் கோரை என்ற கிராமம் அருகே வரும்போது, திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி எதிர் திசையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த மருத்துவர் ரமேஷ் தனது குடும்பத்துடன் வந்த கார் எதிர்பாராத விதமாக கலைவாணன் ஒட்டி வந்த காரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கலைவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கலைவாணனின் மனைவி மகேஸ்வரி மகள் ஆர்த்தி மற்றொரு காரில் வந்த மருத்துவர் ரமேஷ் அவரின் மனைவி பால சங்கரி மகன் கதிரவன், மகள் பிரியதர்ஷினி ஆகிய ஆறு பேரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.