கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி புதிய மேயர் தேர்தல் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் திமுக சார்பில் மேயர் பதவி வேட்பாளராக ரங்கநாயகி(29வது வார்டு கவுன்சிலர்) நிறுத்தப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 கவுன்சிலர்களில் திமுகவுக்கு மட்டும் 76 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக கூட்டணிக்கு 96 இடங்களும், அதிமுக3, சுயேச்சை 1 கவுன்சிலர்களும் உள்ளனர். எனவே திமுக சார்பில் நிறுத்தப்படும் ரங்கநாயகி வெற்றி பெறுவார் என்பது உறுதி.