சமீபத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் நிர்வாகியும் மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட காளியம்மாளை ‘பிசிறு’ என விமர்சனம் செய்து பேசிய ஆடியோ வெளியானது. இந்த நிலையில் சென்னையில் இன்று நடந்த ஆர்பாட்டத்தின் போது சம்மந்தப்பட்ட ஆடியோவிற்கு காரணம் திருச்சி எஸ்பி தான் என மறைமுகமாக பேசிய சீமான் அவரை ஒருமையில் விமர்சனம் செய்து கடுமையாக பேசினார். சீமானின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இந்த நிலையில் சீமானுக்கு திருச்சி எஸ்பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் எஸ்பி வருண்குமார் குறிப்பிட்டுள்ளதாவது… சம்மந்தப்பட்ட வீடியோ தொடர்பாக வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுபப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வெறுப்பு பேச்சுகளை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தனது பதிவில் திருச்சி எஸ் பி வருண் குமார் குறிப்பிட்டுள்ளார்..