Skip to content
Home » பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

பாரிஸ் ஒலிம்பிக் .. 3ம் பதக்க வாய்ப்பை இழந்தார் மனு பாக்கர்!…

  • by Authour

சர்வேதச அளவில் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இன்றைய 8-ஆம் நாளில் நடைபெற்ற 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக மனு பாக்கர் தகுதி பெற்றிருந்தார்.

இந்தியாவுக்காக 3-வது பதக்கம் வென்று மேலும் ஒரு வரலாற்று சாதனை படைப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில்

Manu Bhaker in final of women's 25m pistol event in Paris: When and where  to watch | பாரிஸ் ஒலிம்பிக்: 3-வது பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் மனு  பாக்கர்

இந்த போட்டியில் விளையாடிய அவர் 4-ஆம் இடம் பிடித்து 4 புள்ளிகளில் பதக்கத்தை கோட்டை விட்டிருக்கிறார். இதனால், ‘ஜஸ்ட் மிஸ்ஸில்’ அவரது பதக்கம் பெரும் வாய்ப்பானது பறிபோனது.

மேலும், இந்த போட்டியின் இறுதியில் கொரியாவின் யான் ஜியின் தங்கபதக்கம் வென்றார். அவரை தொடர்ந்து பிரான்சின் கேமில் ஜெட்ரெ ஜெவ்ஸ்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். மேலும், ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதனால் 4 புள்ளிகள் பானு பாக்கர் எடுத்திருந்தால் வெண்கல பதக்கத்தை பிடித்திருக்கலாம் ஆனால் அது தற்போது நூலிழையில் பறிபோனது, மனு பாக்கர் இதற்கு முன் 2 வெண்கல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *