Skip to content

கேரளா நிலச்சரிவு….. தெர்மல் ஸ்கேனர் மூலம், புதையுண்ட சடலங்களை தேடும் பணி

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, கடந்த 29ம் தேதி  நள்ளிரவில் வயநாட்டில் அடுத்தடுத்தமூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் தற்போது வரை கிட்டதட்ட 320க்கும் மேற்பட்டோர்  சடலஙு்கள் மீட்கப்பட்டன. இன்னும் ஏராளமானவர்களை காணவில்லை. எனவே . உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

 இதுவரை 1000-த்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த நிலையில், தேடுதல் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள், கடற்படை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய கடலோரக் காவல் படை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் தேடுதல் மீட்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. 30 பேர் கொண்ட 20க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிக்கப்பட்டு இவர்கள்  தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானப் படை ஹெலிகாப்டர்கள், ராணுவத்தின் மோப்ப நாய்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சகதியிலும், ஆறுகளிலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்காலிக இரும்பு பாலமும் ராணுவத்தினரால் அமைக்கப்பட்டு நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. புல்டோசர்,  மோப்பநாய் மூலம் இதுவரை தேடி வந்தனர்.

இன்னும்  இடிபாடுகள் முழுவதுமாக அகற்றப்படவில்லை.  ஆனால் மீட்பு பணிக்காக அங்க சாலை ஏற்படுத்த வேண்டி உள்ளது. சாலை அமைக்க  வேண்டிய கட்டாயத்தில்  ராணுவத்தினர் வேகமாக நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். எனவே  வயநாட்டில் தற்காலிக பாலத்தையொட்டி   சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த சாலைக்கு அடியில் யாரும்  சடலங்களாக சிக்கி இருக்கிறார்களா,  என்பதை கண்டறிய  மீ்ட்பு குழுவினர்  தெர்மல் ஸ்கேனர் என்ற  கருவி மூலம் தேடுதல் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இந்த இந்திரம்  மனித உடலின் வெப்பநியையை கொண்டு மண்ணுக்கு அடியில் யாராவது சிக்கி உள்ளனரா என கண்டுபிடிக்கும்.    மனித உடல்கள் இருந்தால்  ஸ்கேனர் திரையில் காட்டிக்கொடுத்து விடும் .   சாலை போடுவதற்கு முன் தெர்மல் ஸ்கேனர்  சாலைகளில் கொண்டு செல்லப்படும்போது அதன் திரையில் ஏற்படும் மாற்றங்களைக்கொண்டு  மண்ணுக்குள் சடலங்கள் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

நவீன தொழில் நுட்பு யுத்திகளை கையாண்டு   வயநாடு பகுதிகளில் நிவாரணப்பணிகளை  நமது அரசு செய்து  வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!