அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் வட்டம் மெய்காவல்புத்தூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ் (23), மற்றும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் ஈச்சம்பூண்டி நடுத்தெருவைச் சேர்ந்த அறிவழகன் மகன் விநாயகன் (24) இருவரும் கள்ளத்தனமாக கஞ்சா விற்பனை செய்தனர். இதனை அடுத்து ஆகாஷ், விநாயகன் மீதும் அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் 02.07.2024 அன்று வழக்குப்பதிவு செய்து, கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைத்தார்கள். பின்னர் புதுக்கோட்டை மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் ஆகாஷ், விநாயகன் இருவரும் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்ற செயல் ஈடுபடுவதனாலும், இவர்கள் வெளியே இருந்தால் மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும் ஆகாஷ், விநாயகன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அரியலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தண்டபாணி கோரியதன் அடிப்படையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ்ன் மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.இரத்தினசாமி, ஆகாஷ், விநாயகன் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் அடைக்க ஆணை பிறப்பித்தார். அதனையடுத்து காவல்துறையினர் மேற்படி ஆகாஷ், விநாயகன் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.