முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி 2018 ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது 6ம் ஆண்டு நினைவு தினம் வரும் 7ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அன்று காலை 7மணிக்கு சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து திமுகவினர் அமைதிப்பேரணி நடத்துகிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் பேரணியாக கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்கள். இதில் அமைச்சர்கள் , எம்.பி, எம்எல்ஏக்கள் உள்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைவரும் கலந்து கொள்ளும்படி திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.