Skip to content
Home » மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து…சிபிஎம்-சிபிஐ சாலை மறியல்… தள்ளுமுள்ளு..போலீசாருக்கு காயம்..

  • by Senthil

மத்திய அரசின் தமிழ்நாடு விரோத பட்ஜெட்டை கண்டித்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பாக இடதுசாரி கட்சிகளின் மறியல் போராட்டம் நடைபெற்றது. இடதுசாரி கட்சிகளை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம் எல் கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் பி சீனிவாசன் என் சீனிவாசன் குணசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு மானியம். உரத்திற்கான மானியத்தை வெட்டி விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளதை கண்டிப்பதாகவும் உணவு பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் அனைத்துப்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள்

புறக்கணிக்கப்பட்டுள்ளது. பெருகி வரும் வேலையின்மை,இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் இல்லை.

தேசிய ஊரக வேலைத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வாரி வழங்கியுள்ளது. சிறுகுறு தொழில்கள், நடுத்தர மக்களை பாதுகாக்க நிதி ஒதுக்கீடு இல்லை. ஒன்றிய அரசிற்கு முட்டுகொடுக்கும் மாநிலங்களுக்கு கூடுதலான ஒதுக்கீடும். தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளை முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட மோசடி பட்ஜெட் என்பதை கண்டித்து உரையாற்றினர்.

தலைமை தபால் நிலையம் முன்பாக நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் தடுப்பு அரணை ஏற்படுத்தியிருந்தனர். கம்யூனிஸ்ட் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் திடீரென தபால் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர், அவர்களை போலீசார் தடுத்ததில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதில் ராமகிருஷ்ணன் என்ற ஏட்டுவுக்கு சட்டை கிழிந்தது, சுபாஷ் என்ற சிறப்பு காவல் போலீசின் இடது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அதேபோன்று இந்திய ஜனநாயக சங்கத்தின் மாவட்ட தலைவர் ஐயப்பன் மண்டை உடைந்தது அவரை மருத்துவமனை அழைத்து சென்று சென்று சிசி அளிக்கப்பட்டது.
போலீசைஏதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். தபால் நிலையம் முன்பு சாலை
மறியலில் ஈடுபட்ட கட்சியினரை போலீசில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். தாக்குதலுக்கு உள்ளன. இருவருக்கும் மயிலாடுதுறைஅரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!