Skip to content
Home » தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

  • by Authour

 ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை,  எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பலை மோதச் செய்தது.  இதில் விசைப்படகில் இருந்த 5 மீனவர்கள் தவறி கடலில் விழுந்தனர்.  படகும் சேதமடைந்தது.  இலங்கை கடற்படை கொலை வெறியுடன் இந்த தாக்குதலை நடத்தினர்.

பின்னர் இலங்கை கடற்படையினர்ரே 3  மீனவர்களை  மீட்டனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.  கப்பல் மோதியதில் படுகாயமடைந்த இருவரும் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு, புங்குடுதீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காணாமல்போன 2 மீனவர்களை தேடும் நடவடிக்கையிலும் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். படகில் இருந்த மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற மீனவர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை என உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இலஙு்கை ராணுவத்தின் இந்த கொலை வெறித்தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து  இந்தியா கண்டனத்தை பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *