Skip to content
Home » கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

கேரள நிலச்சரிவு….. புதையுண்டதாக கருதப்பட்டவர்…..உயிர்தப்பிய அதிசயம்…. பேட்டி

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு  பகுதியில் 3 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். சூரல்மலை என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில்  தீரஜ் என்பவரது  வீடு தரைமட்டமாகி கிடந்தது. அவரது வீட்டில் தீரஜ்  தனது 2 சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படம் மட்டும் கிடந்தது.   அதைப்பார்த்த  ஊடகத்தினர் 3 பேரும் புதையுண்டு போய்விட்டனர்   என  அந்த போட்டோவுடன் செய்தி வெளியிட்டனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக தீரஜ் தப்பி பிழைத்து  அங்குள்ள முகாமில் தங்கி உள்ளார்.  அவர் இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் கூறியதாவது:

நாங்கள் மூவரும் பாதுகாப்புடன் உள்ளோம். நானும்என் தாயாரும் முகாமில் தங்கி உள்ளோம் . என் சகோதரிகள் இருவரும் வெளியூரில் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று கூறினார்.

.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *