பெரம்பலூர் அருகே உள்ள வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருபவன் சரண்ராஜ் மகன் முகேஷ் இவர் நேற்று காலை பள்ளி வளாகத்தின் நுழைவு வாயில் இரும்பு கதவிற்கு வெளியே பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை கண்டவுடன் அவர்கள் உள்ளே வருவதற்காக இரும்பு கதவை திறந்துள்ளார்.அப்போது இரும்பு கதவின் மேல்பகுதி தேய்ந்த நிலையில் இருந்ததால் எதிர்பாரத விதமாக இரும்பு கதவானது மாணவன் முகேஷ் ன் மீது விழுந்ததில் மாணவனின் இடது கால் எழும்பு முறிந்தது பின்னர் அவர் பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.