இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். அவர் பல்வேறு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். இரவில் திருச்சியில் தங்கிய அமைச்சர் இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். காலை 8 மணிக்கு திருச்சி விருந்தினர் விடுதியில் இருந்து புறப்பட்ட அமைச்சர் உதயநிதி, அந்தநல்லூர் ஒன்றியம் அல்லூரில் உள்ள பாரதி தொடக்கப்பள்ளிக்கு சென்றார்.
அங்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். உணவு சுகாதாரமான முறையில், தயாரித்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கிய அமைச்சர் உதயநிதி அங்கு குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். அப்போது அருகில் இருந்த குழந்தையிடம் உணவு ருசியாக இருக்கிறதா என அமைச்சர் கேட்டார். அதற்கு அந்த குழந்தை டேஸ்டா இருக்கிறது என்று கூறியது
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ் பொய்யாமொழி, கலெக்டர் பிரதீப் குமார், பழனியாண்டி எம்.எல்.ஏ மற்றும் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி துறையூர் அடுத்த பச்சமலை புறப்பட்டு சென்றார். அஙு்குள்ள மலை கிராமமான புத்தூர் சென்று அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியிலும் அமைச்சர்கள் நேரு, மகேஸ், மற்றும் கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்ட அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.