திருச்சியில் 2நாள் பயணமாக பல்வேறு ஆய்வு கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் கட்சி கூட்டங்களை கலந்து கொள்ள இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அவரை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.06.2024 நாளன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண்.110ன்கீழ் திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து திருச்சியில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம்
மற்றும் அறிவுசார் மையம் மதுரை சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமையவுள்ளது. இந்த இடத்தை இளைஞர் நலம் மற்றும் எட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கேஎன் ஒரு மகேஷ் ஆகியோருடன் சென்று நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர்.அன்பழகன், மண்டலம் தலைவர் மதிவாணன் : கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், பொது நூலக இயக்குநர் இளம்பகவத், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.