Skip to content
Home » எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

எம்பிபிஎஸ் கலந்தாய்வு ஆக.21ல் தொடங்கும்… அமைச்சர் மா. சு. பேட்டி

  • by Senthil

2024-25 ம் கல்வியாண்டிற்கான, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான MBBS மற்றும் CBSE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிமுதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்  கூறியதாவது:

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனை சார்ந்த அரசு பள்ளி, மருத்துவ கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணியுடன் ww.tnmedicalselction.org இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . ஆகஸ்ட் 8 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.மத்திய  அரசு நாடு முழுவதும் இந்த முதற்கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 14ம் தேதி முதல் நடத்துகிறது.

ஆனால் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ம் தொடங்க தொடங்க உள்ளது. மருத்துவப் படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் 19-ம் தேதி வெளியாகும். 7.5% இடஒதுக்கீடு, சிறப்பு பிரிவினர் விண்ணப்பங்களை 28ம் தேதி நேரில் நடைபெறும் எனவும் இதர பிரிவுகளுக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் தேரில் ஏற்பட்ட முறைகேடு காரணமாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளினால் மருத்துவ படிப்பு கலந்தாய்வு துவங்குவதால் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் ஆகஸ்ட் 14ம் தேதி நாடு முழுவதும் துவங்ககூடிய கலந்தாய்வில், தமிழகத்தில் மட்டும் ஒரு வாரம் கழித்து தாமதமாக ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநில அரசின், மருத்துவ கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக, 15 சதவீதம் இடங்களில், மாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு அறிவிப்பு ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு மொத்தம் 9,050 இடங்கள் உள்ளன. 21 தனியார் கல்லூரிகளில் 3,400 மருத்துவ இடங்கள் உள்ளன. 2,200 பல் மருத்துவ இடங்கள் உள்ளன, இதில் 200 அரசு இடங்கள் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் அமைச்சர் தெரிவித்தார்.

 

ஆன்லைனில் நடைபெறக்கூடிய கலந்தாய்வுக்கான முதல் சுற்றில் ஆகஸ்ட் 14 முதல் 24, 9ம் தேதி வரை மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 16 முதல் 20ம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு பிறகாக 20,22தேதிகளில் சிறப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆகஸ்ட் 23ம் தேதி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் குறித்தான அறிவிப்பு வெளியாகும். ஆகஸ்ட் 24 முதல் 29ம் தேதிவரை மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவின் சார்பில் அறிவித்திருந்தனர். ஆனால் தமிழகத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!