பெண் போலீசார் குறித்த அவதூறு கருத்துக்களை கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை நெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் ஒளிபரப்பியது. இதையொட்டி அதன் செயல் அதிகாரியான பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி பெலிக்ஸ் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் இனி இதுபோல பேசமாட்டேன். அது எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை உணர்ந்து கொண்டேன் என கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி தமிழ்ச்செல்வி, அவரது யூ டியூப் சேனலை மூடவும் உத்தரவிட்டார்.