புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டேவின் உத்தரவுப்படி திருக்கோகர்ணம் காவல் சரகம் பாலன் நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள்
குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள், உதவி எண்கள் 1098,1930, மற்றும் 181 குறித்தும் புதுக்கோட்டை குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் கா. வைரம், சிறப்பு உதவி ஆய்வாளர் ரேவதி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.