பொதுத்துறை வங்கிகளின் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் இருந்து அபராதம் பிடித்தம் செய்யப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இப்படி ரூ. 8,500 கோடி அபராதமாக வசூல் செய்திருக்கிறது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள். மக்கள் பணத்தை வாரி சுருட்டிய வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் முன்னணியில் உள்ளது. இந்த வங்கிகள் தான் அதிகபட்சமாக அபராதம் வசூலித்துள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.