Skip to content
Home » லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

லோன் வாங்கி தருவதாக கூறி ரூ. 60 லட்சம் மோசடி… ஏமாற்றிய வாலிபர் கைது..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் பாகசாலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுராஜ்(33) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பொருத்தும் பணி செய்யும் இவர் மயிலாடுதுறை கூட்டுறவு நகரை சேர்ந்த மனோகரன் (60), என்பவரிடம் தான் மைக்ரோ பைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும், எந்த ஜாமினும் இல்லாமல் ரூபாய் 60 லட்சம் லோன் வாங்கி தருவதாக நம்பிக்கையை ஏற்படுத்தி 20% முன் பணமாக மனோகரனிடமிருந்து ரூபாய். 12,17,000/- பணத்தை பெற்றுக்கொண்டு லோன் வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றியுள்ளார். இதே போல் மயிலாடுதுறை ஒத்த சரகு தெருவில் வசிக்கும் மக்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராதா என்பவரிடமும் சுமார் ரூபாய் 15 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து பணத்தை ஏமாந்த 10க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனாவிடம் புகார் அளித்த நிலையில் கடந்த ஜனவரி 1ம்தேதி யேசுராஜ் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் கரைமேடு கிராமத்தில் பதுங்கியிருந்த ஏசுராஜை போலீசார் செல்போன் டவர் மூலம் கண்டுபிடித்து கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்திய நிலையில் சோழசக்கரநல்லூரை சேர்ந்த ராஜேந்திரபிரசாத் என்பவர் தனது திருமணத்திற்காக கடன்வாங்கிய தொகையை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியபோது ஏசுராஜ் ரூ.20 லட்சம் வரை லோன் வாங்கி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறி உடனடியாக லோன் வேண்டுமென்றால் 2 லட்சம் முன்பணம் வேண்டும் என்று கேட்டதன்பேரில் தனது மனைவியின் நகையை அடகு வைத்து கொடுத்த பணத்தை ஏமாற்றிவிட்டதாக புகார்மனுவுடன் வந்து தனது பணத்தை மீட்டுதரகோரி புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 60 லட்சத்திற்குமேல் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து ஏசுராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!