இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் பிற்பகல் 2.30 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நி்லையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முழு விவரம்:
மாலை 3மணியளவில் திருச்சி அடுத்த நம்பர் 1 டோல்கேட் அருகில் புகழினி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
மாலை 3.15 மணி: திருவெறும்பூர் ஒன்றியம்,காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அங்கூரன் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
3.45 மணி: திருவெறும்பூர் வட்டம் சூரியூர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்கிற்கு இடம் தேர்வு செய்ய அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார்.
மாலை 5 மணி: திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூரில் பணிகள் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
மாலை 5.15 மணி: திருச்சி கலையரங்கில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி விழாப்
பேருரையாற்றுகிறார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் , கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். ,இன்றைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் திருச்சியில் தங்கும் அமைச்சர் உதயநிதி, நாளை (வியாழன்) திருச்சி மாவட்டத்தில் 2ம் நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
1ம் தேதி காலை 8 மணி: திருச்சி அடுத்த திருப்பராய்த்துறையில் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருச்சி மாவட்டம் பச்சமலையில் ஆய்வு மேற்கொள்கிறார். காலை 10.30 மணிக்கு தென்புறநாடு ஊராட்சி புத்தூர் குக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்கிறார்.
பயனாளிகளுடன் கலந்துரையாடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
11.30 மணி: துறையூர் தென்புற நாட்டில் ஆய்வு மேற்கொள்கிறார்.
12 மணி: என்ஐடியில் படிக்க தேர்வாகி உள்ள மலைவாழ் மாணவி ரோகிணியை சந்தித்து அமைச்சர்உதயநிதி பாராட்டுகிறார்.
12.15 மணி கோம்பை கிராமம் சின்ன இலுப்பூர் சென்று ஆய்வு மேற்கொள்கிறார்.
2 மணிக்கு திருச்சி வந்தடையும் அமைச்சர் உதயநிதி, மதிய உணவுக்கு பின்னர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
மாலை 4.30மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். இரவு 7 மணி வரை கூட்டம் நடைபெறும். கூட்டம் முடிந்ததும் அமைச்சர் உதயநி்தி ஈரோடு மாவட்டம் புறப்பட்டு செல்கிறார்.