இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் மூடப்படுகின்றன. வழக்கமாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை. அத்துடன், பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் வங்கிகள் மூடப்படும். மாநிலங்களை பொருத்து விடுமுறை நாட்கள் மாறுபடும்.
ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும்?
1. ஆகஸ்ட் 3 ஆம் தேதி கேர் பூஜை காரணமாக அகர்தலாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
2. ஆகஸ்ட் 4, ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
3. இதைத் தொடர்ந்து, ஹரியாலி தீஜ் காரணமாக ஹரியானாவில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
4. Tendong Lo Rum Fat காரணமாக ஆகஸ்ட் 8 ஆம் தேதி காங்டாக்கில் விடுமுறை அளிக்கப்படும்.
5. அதன்பிறகு ஆகஸ்ட் 10ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படும்.
6. ஆகஸ்ட் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
7. தேசபக்தர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13ம் தேதி இம்பாலில் வங்கிகள் மூடப்படும்.
8. ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
9. ஆகஸ்ட் 18 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காரணமாக, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
10. ஆகஸ்ட் 19ம் தேதி ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு அகமதாபாத், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
11. ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி ஆகஸ்ட் 20 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் இன்று வங்கிகள் இயங்காது.
12. ஆகஸ்ட் 24 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை காரணமாக நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
13. பின்னர் ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
14. மேலும் ஜென்மாஷ்டமி ஆகஸ்ட் 26 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.