நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும். இதன் காரணமாக, இரு மாவட்டங்களுக்கும், ‘ஆரஞ்சு அலெர்ட்’ விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. நீலகிரி, கோவையில் இன்று(ஜூலை 31) மிக கனமழையும், திருப்பூர், தென்காசி, தேனி, திருநெல்வேலி, திண்டுக்கல் உட்பட ஆறு மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும். அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்படடுள்ளது.
