அரியலூர் மாவட்டம் சுண்டக்குடி அருகே உள்ள வள்ளக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்ஹாசன். விவசாயி. இந்நிலையில் இவரது வீட்டின் சாவியை நிலவசாலில் வைத்து விட்டு செல்வது வழக்கம். இதனையடுத்து கடந்த 26 ஆம் தேதி அங்கு வந்த மர்ம நபர் சாவியை எடுத்து வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதே போல் அவரது தம்பி வீட்டின் கதவை திறந்து வீட்டில் இருந்த 500 ரூபாய் பணத்தை எடுத்து சென்றுள்ளனர். அதே சமயம் வீட்டில் இருந்த சின்ன சின்ன தோடு மற்றும் நகைகள் அப்படியே உள்ளது. இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனார். இதில் அதே பகுதியை சேர்ந்த செங்கமேடுகாட்டு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்து 35 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மீதி பணத்தில் அந்த சிறுவன் 13 ஆயிரத்திற்க்கு செகணன்ட்டில் பைக் வாங்கியுள்ளார்.
இதனையடுத்து அவனை போலீசார் நீதிபதியிடம்ஆஜர் படுத்தினர் சிறுவன் என்பதால் அவனை நீதிபதி ஜாமீனில் வெளியிட்டார். இதே சிறுவன் கடந்த வாரம் கயர்லாபாத் போலீஸ் சரகத்தில் இதே போல் ஒரு திருட்டு வழக்கில் வெளிவந்தது குறிப்பிடதக்கது.