அரியலூர் மாவட்டம்,வாலாஜாநகரம் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கீழ், அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 672 பள்ளிகளில், 2 – ஆம் வகுப்பு முதல் 8 – ஆம் வகுப்பு வரை பயிலும், 47034 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சீருடைகளையும், சமூக நலத்துறை சார்பில், 10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகளையும், மாவட்ட ஆட்சித்தலைவர்
பொ.ரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜ மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன்,வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரி மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.