நேற்று மாலை ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு… ராஜஸ்தான் கவர்னராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா கவர்னராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் கவர்னராக ஓம் பிரகாஷ் மாத்துார் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல், ஜார்க்கண்ட் கவர்னராக சந்தோஷ் குமார் கங்வாரும், சத்தீஸ்கர் கவர்னராக ராமன் தேகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேகாலயா கவர்னராக சி.எச்.விஜயசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் கவர்னராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் கவர்னராக இருந்த குலாப் சந்த் கட்டாரியா, பஞ்சாப் கவர்னராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் கவர்னராக இருந்த லக் ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு, மணிப்பூர் கவர்னர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.