டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது . பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது. மற்றவர்கள் 20 நிமிடம் வரை பேசினார்கள்.
எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்றேன். இருந்தும், என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருந்தபோதே எனது மைக்கை ஆஃப் செய்துவிட்டார்கள். ஏன் என்னை தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். இந்த கூட்டத்தில் நான் பங்கேற்றதற்காக நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். மாறாக, உங்கள் கட்சிக்கும், உங்கள் அரசாங்கத்திற்குமே அதிக வாய்ப்புகளைக் கொடுக்கிறீர்கள். எதிர்க்கட்சிகள் தரப்பில் நான் மட்டுமே பங்கேற்ற போதும், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்கத்தை மட்டுமல்ல, அனைத்து பிராந்திய கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும்” எனக் கூறியிருந்தார்.
மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “ஒரு மாநிலத்தின் முதல்வரை நடத்தும் விதமா இது?”
ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளும் ஓர் அங்கம் என்பதை மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும். கூட்டாட்சியில், அனைவரது கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
.
இ