மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதைக்கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி்னர்.
கரூர்தலைமை தபால் நிலையம் முன்பு கரூர் மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோவன், சிவகாமசுந்தரி் உள்பட 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வைத்தனர்,
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் சிறப்புரையாற்றினார்.
எம்எல்ஏ பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், குத்தாலம் கல்யாணம், ஜெகவீரபாண்டியன், குத்தாலம் அன்பழகன், டாக்டர் பன்னீர்செல்வம், அருள்செல்வன் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழக மக்களை ஏமாற்றாதே, எங்கள் வரிப்பணம் எங்கே போச்சு, தமிழ்நாட்டை வஞ்சிக்காதே வரி என்றால் இனிக்குதா நிதி என்றால் கசக்குதா, தமிழர்கள் நாங்கள் இந்தியர் இல்லையா, பதில் சொல் பதில் சொல் என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்குமத்திய மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்.எல்.ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை எம்.பி. ச. முரசொலி, எம்எல்ஏ. டி கே ஜி நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், து. செல்வம், மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட அவைத்தலைவர் இறைவன், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஜித்து, மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்க்ஸ், மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளரும், துணை மேருமான அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் அண்ணா,
மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகர நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, சரவணன், சுப்பிரமணியன், ஒன்றிய குழு தலைவர் செல்ல கண்ணு, ஒன்றிய செயலாளர் அருளானந்த சாமி, வல்லம் நகர திமுக செயலாளர் டி.கே.எஸ்.ஜி.கல்யாணசுந்தரம், பகுதி செயலாளர்கள் சந்திரசேகர மேத்தா சதாசிவம், கார்த்திகேயன், நீலகண்டன், கனகவல்லி, இளைஞர் அணி அமைப்பாளர் முகில் வேந்தன் துணை அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணி கண்ணன், கவுன்சிலர் உஷா, ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமார், உலகநாதன் உள்பட திரளானோா் பங்கேற்றனர். முடிவில் மேயர் சண். ராமநாதன் நன்றி கூறினார்.