நிதி ஆயோக் கூட்டம் டில்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி முதல்வர்கள் மட்டும் பங்கேற்றனர். எதிர்க்கட்சியை சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியபோது மேற்கு வங்கத்திற்கு நிதி வேண்டும் என கேட்டபோது மைக் ஆப் செய்யப்பட்டது. இதனால் அவர் வெளிநடப்பு செய்தார். கூட்டத்தை விட்டு வெளியே வந்த மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட் அரசியல் ரீதியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடம் கூட பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்குள் மைக் ஆப் செய்யப்பட்டது. எனவே வெளிநடப்பு செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.