கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 9-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு பள்ளியின்
தாளாளர், முதல்வர், ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொய்யா, மாதுளை, நெல்லி, பாதாம், புங்கை, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன