டில்லியில் ஜனாதிபதி மாளிகையில் இன்று (சனிக்கிழமை) நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில யூனியன் பிரதேசங்களில் மட்டும் துணை நிலை கவர்னர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான ‘விக்சித் பாரத் 2047’ திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுவை முதல்வர் ரங்கசாமி் மற்றும் இந்தியா கூட்டணி மாநில முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.