மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மலம்
உண்ணும் போராட்டம் அறிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அப்பொழுது அவர்களை இது போன்ற போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தார்.