மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 92.62 அடி. அணைக்கு வினாடிக்கு 45,598 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.697 டிஎம்சி. அணையில் இருந்து குடிநீருக்காக 1004 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள கபினியில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே. ஆர்.எஸ் அணைளயில் இருந்து வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்று நள்ளிரவு மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் 1ம் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும். நீர்வரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் அணை நிரம்புவதில் தாமதம் ஏற்படலாம். அல்லது ஒரு நாள் முன்னதாகவே நிரம்பலாம். எனவே மேட்டூர் அணையில் இருந்து இன்னும் ஒரு சில தினங்களில் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Mettur Level – 92.62
Inflow – 45598
Outflow – 1004
Capacity – 55.697
Cauvery – 0
Vennaru – 0
G.A.Canal – 0
Kollidam – 45
Last year level – 65.80