1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின் 25ம் ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த போரில் திருச்சி மேஜர் சரவணன் பங்கேற்று 4 எதிரிகளை வீழ்த்தி எதிரிகனின் முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு பின், வீரமரணம் அடைந்தார்.
அதைத்தொடர்ந்து மேஜர் சரவணனுக்கு “ஹீ ஆஃப் பாட்டாலிக்” , வீர் சக்ரா விருதுகள் வழங்கப்பட்டது. திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகே, மேஜர் சரவணனுக்கு நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டது.
கார்கில் வெற்றிதினத்தின் வெள்ளிவிழா கொண்டாடப்படும் இன்று, மேஜர் சரவணன் நினைவு ஸ்தூபியில்
மரியாதை செலுத்தப்பட்டது. திருச்சி ராணுவ முகாம் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், காவல் ஆணையர் காமினி, மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி, தேசிய கல்லூரி முன்னாள் முதல்வரும், என்சிசி அதிகாரியுமான சுந்தர்ராமன், என்சிசி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், பொதுமக்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.