கரூர், குளித்தலை அருகே அய்யர்மலை ரோப் காரில் அந்தரத்தில் சிக்கி பக்தர்கள் தவித்தனர். அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்திலிருந்து கயிறு நழுவியதால் பாதியில் ரோப்கார் நின்றது. 40 க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ரோப் காரில் பயணம் செய்துள்ளனர். கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். பாதியில் நின்ற ரோப் காரில் 3 பெண் பக்தர்கள் வெகு நேரமாக தவித்து வருகின்றனர். ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர். ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
