பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிறுவனமான ராமதாஸின் 86 ஆவது பிறந்தநாள் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினரால் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் வைத்தி தலைமையில், மருத்துவர் ராமதாஸ்சின் 86 வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி
கொண்டாடினர். ராமதாஸின் பிறந்தநாளை ஒட்டி 1086 தென்னை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இதேபோல் அரியலூர் மாவட்டம் முழுவதும் அன்னதானம் வழங்குதல், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், கோயில்களில் சிறப்பு வழிபாடு என பல்வேறு நிகழ்ச்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி கவுன்சிலர்கள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.