அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் – அடிக்காமலை சாலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி பெயர்ந்த சாலை, குண்டுன்குடியுமாக மாறி வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகு வருகின்றனர் குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தோம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்.ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது*
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் – அடிக்காமலை சாலையில் கடந்த சில மாதங்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி ஓடி வருகிறது.
இதனால் குடிநீர் சாலை முழுவதும் ஓடி இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கி சாக்கடையாக உள்ளது. அதனால்
தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலம் தேங்கிய நீரில் கொசுப்புழு உற்பத்தியாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் தண்ணீர் சாலையில் ஓடிக்கொண்டே இருப்பதால் சாலை முற்றிலும் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மேடு பள்ளம் தெரியாமல் சாலையில் தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் அலட்சியம் காட்டுவதாக கூறி நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தா.பழூர் – அடிக்காமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.