தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊராட்சிகள் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, பொதுப்பணித் துறை. கால்நடை பராமரிப்புத் துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள் துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்தாய்வு மேற்கொண்டார்.
ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படுகின்ற பணிகளை துரிதமாகவும், தரமாகவும், முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்துத் துறை அலுவலர்களும் தொய்வின்றி பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் , மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.