தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது சேதுபாவசத்திரம் . கடலில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் உள்ள ஒரு குளத்தில் 2 நீர்நாய்கள் காணப்பட்டது. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் இந்த நீர் நாய்கள் கரைக்கு வந்து ஜாலியாக துள்ளி்விளையாடுகிறது. ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டால் குளத்திற்குள் ஓடி மறைந்து விடுகிறது. இந்த நீர்நாய்கள் நீர் வாழ் உயிரினங்களான
Video Player
00:00
00:00
மீன், நண்டுகள் போன்றவைகளை உண்டு உயிர்வாழ்கின்றன.
இந்த நீர்நாய்கள் சில நேரங்களில் காவிரி ஆற்றில் பல இடங்களில் தென்பட்டுள்ளது. வழக்கமாக கடலில் காணப்படும் இந்த நீர்நாய்கள் சேதுபாவாசத்திரம் கடலில் இருந்து வந்திருக்கலாம் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.