முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த வழக்கில் விசாரணை நடந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகள் விடுத்தனர். இறுதியாக இந்த எளிய கேள்விக்கு கூட உங்களிடம் பதில் இல்லை என்றால் நாளைக்கு பதில் கூறுங்கள் என வழக்கை இன்றைய தினத்துக்கு(வியாழன்) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
ஆனால் இன்றைய தினம் இந்த வழக்கு பட்டியலிடப்படவில்லை. இது குறித்து செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டபோது வழக்கு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.