ரூ.100 கோடி நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட கரூர் விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்குகள் தொடர்பாக சில தகவல்களை பெற வசதியாக சிபிசிஐடி போலீசார் தங்களது கஸ்டடியில் வைத்து விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில் இன்று கரூர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விஜயபாஸ்கரை ஆஜர்படுத்தினர். ஏற்கனவே வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் எனவே 2 நாள் கஸ்டடி வழங்க வேண்டும் என நீதிபதியிடம் வாங்கல் போலீசார் அனுமதி கேட்டனர். அப்போது வாங்கல் போலீசாருக்கு ஒரு நாள் மட்டும் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டார்.
