Skip to content

அரியலூர்.. 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை….. 80வயது முதியவர் கைது…

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள திடீர் குப்பத்தை சேர்ந்தவர் மூக்காயி இவரது 8 வயது குழந்தையை கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை (80) என்பவர் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனை சிறுமியின் தயார் மூக்காயி ஊர் பெரிய மனிதர் என்ற முறையில் கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மருதமுத்து விடம் கூறியுள்ளார். அவர் நீ சமாதானம் பேசி 80 வயது முதியவரிடம் இருந்து 25 ஆயிரம் பணத்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த தகவல் குறித்து 1098 என்ற எண்ணிற்கு புகார் வர மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திக் விசாரணை மேற்கொண்டதில் இந்த விஷயத்தை உறுதி செய்தார்.

இது குறித்து அரியலூர் அனைத்து மகளிர்  போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் விஜயலெட்சுமி வழக்கு பாலியல் தொந்தரவு செய்த 80 வயது முதியவர் சின்னப்பிள்ளை, பணத்தை பெற்றுக்கொண்ட குழந்தையின் தாய் மூக்காயி இந்த விவகாரத்தை மூடிமறைத்து பணம் வாங்கி கொடுத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மருதமுத்து ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து முதியவர் சின்னப்பிள்ளையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!