தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீரசிம்ம ரெட்டி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சங்கராந்திக்குவெளியானது. கோபிசந்த் மலினேனி இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் தான் பாலகிருஷ்ணா படங்களிலேயே அதிக வசூல் செய்த படம். கோபிசந்த், ரசிகர்கள் விரும்பியபடி பாலகிருஷ்ணாவை மாஸாக காட்டி உள்ளார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தயாரிப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வெற்றி விழாவுக்கு ஏற்பாடு செய்தனர்.
வீரசிம்ம ரெட்டி படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர். வெற்றி விழாவில் ஹீரோயின் ஹனி ரோஸ் அனைவரது பார்வையையும் கவர்ந்தார். தனது கவர்ச்சியால் அனைவரையும் திகைக்க வைத்தார். நீல நிற உடையில் கலந்து கொண்டார். சக்சஸ் பார்ட்டியில் பாலகிருஷ்ணாவுடன் அவர் மது அருந்திய புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர்கள் ஷாம்பெயினை இருவரும் கை கோர்த்து கொண்டு ரொமான்டிக்காக குடிப்பது ஹாட் டாபிக் ஆனது.
இருவரும் கை கோர்த்து மது அருந்தும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இப்படி சக்சஸ் பார்ட்டியை ரசிக்கிறார் பாலகிருஷ்ணா என ரசிகர்கள் கூறி வரும் நிலையில், சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். இது பாலகிருஷ்ணாவின் தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும்.. அவர் மூத்த நடிகர் மட்டுமல்ல.. எம்எல்ஏவும் கூட. இதன் மூலம், இதுபோன்ற காட்சிகளை எவ்வளவு ரகசியமாக வைக்கப்படுகிறதோ, அவ்வளவு நல்லது என்று விமர்சிக்கப்படுகிறது. வீரசிம்ம ரெட்டி திரைப்படம் பாலகிருஷ்ணா கேரியரில் அதிகபட்சமாக 70 கோடிகளை வசூலித்துள்ளது. இப்படத்தில் ஹனி ரோஸ் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். வரும் நாட்களில் ஹனி ரோஸ் தெலுங்கு சினிமாவில் கிரேஸி ஹீரோயினாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.