தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவராக பீட்டர் அல்போன்ஸ் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக் காலம், மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின் புதிய தலைவராக, ‘லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’ நிறுவனத்தின் இயக்குனர் ஜோ அருண் நியமிக்கப்பட்டு உள்ளார். துணைத்தலைவராகஅப்துல் குத்துாஸ் என்ற இறையன்பன் குத்துாஸ்; உறுப்பினர்களாக ஹாமில்டன் வெல்சன், சொர்ணராஜ், நாகூர் நஜிமுதீன், பிரவீன்குமார் தாட்டியா, ராஜேந்திர பிரசாத், ரமீத் கபூர், முகமது ரபீ, வசந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களும் இந்தப்பதவியில் 3 ஆண்டுகாலம் இருப்பார்கள். இதற்கான அரசாணையை, சிறுபான்மையினர் நலத்துறை செயலர்விஜயராஜ்குமார் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழக தலைவராக பெர்னாண்டஸ் ரத்னராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
பீட்டர் அல்போன்ஸ் பதவி காலம் முடிந்தது.. சிறுபான்மையினர் ஆணைய புதிய தலைவர் ஜோ அருண்
- by Authour
